கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட அரவின் சபேசன்: ஓடும் காரில் இருந்த அரவின்னை சுட்டுக் கொன்றவர்கள் யார் ?

இந்த செய்தியை பகிருங்கள்

கனடாவின் டியூரஹாம், நகரில் இந்த வருடத்தில் நடக்கும் 6வது கொலை இது. அதுவும் ஒரு ஈழத் தமிழர் இளைஞர் சுடப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த வியாழன்(19) அன்று, சாலையில் ஒரு ஹொண்டா காரில் பயணித்துக் கொண்டு இருந்துள்ளார் 20 வயது நிரம்பிய அரவின். பிக்கரிங் என்னும் இடத்தில் உள்ள, Taunton Road சாலை வழியாக அவர் சரியாக 11.30 காரை ஓட்டிச் சென்றுள்ளார். திடீரென அவரது கார் பாதையை விட்டு விலகி இடிபட்டு நின்றுவிட்டது. முதலில் இதனை அவதானித்த மக்கள், இது ஒரு விபத்து என்று நினைத்து பொலிசாரை அழைத்துள்ளார்கள். அங்கே வந்த பொலிசாருக்கு முதலில் புரியவில்லை. பின்னரே அரவின் உடலில் உள்ள துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் பற்றி அம்புலன்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனவே அரவின் காரை ஓட்டிச் செல்லும் வேளையில், எதிர் திசையில், அல்லது அவருக்கு அருகில் வந்து யாரோ துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக…

பொலிசார் நம்புகிறார்கள். இதனால் குறித்த சாலையில்(Taunton Road) காலை 11.30 தொடக்கம் 12.30 வரை பயணித்த எந்த ஒரு வாகனத்திலாவது டாஷ் காம் என்று அழைக்கப்படும் கமரா இருந்ததா ? இருந்தால் உதவி செய்யுங்கள் என்று பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளார்கள். எனவே தமிழர்களே நீங்கள் எதனையாவது பார்த்திருந்தால் உடனே பொலிசாரை தொடர்பு கொள்வது நல்லது. அரவின் சபேசன் ஆத்ம சாந்திக்கு அதிர்வு இணைய வாசகர்களும் பிரார்த்திப்போம்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us