மனைவியுடன் திருமணமாகாத வாலிபர் அடிக்கடி பேசி வந்ததால் கணவர் வெறிச்செயல்

இந்த செய்தியை பகிருங்கள்

மனைவியுடன் திருமணமாகாத வாலிபர் அடிக்கடி பேசி வந்ததால் ஆத்திரமடைந்த கணவர் அவரை அடித்து கொலை செய்திருக்கிறார். தென்காசி மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி பகுதியில் காலாடி தெருவை சேர்ந்தவர் கணேசன். 23 வயதான இந்த இளைஞருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்கிற 29 வயது வாலிபருக்கு திருமணமாகவில்லை. கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணன், கணேசன் மனைவியுடன் அடிக்கடி பேசி வந்திருக்கிறார்.

இதை கவனித்த கணேசன், மனைவியை கண்டித்து இருக்கிறார். ஆனால் அதன் பின்னரும் இருவரும் அடிக்கடி பேசி வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணனை பார்த்த கணேசன், இனி என் மனைவியிடம் நீ பேசக்கூடாது என்று கண்டித்து இருக்கிறார் . அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் தடித்ததில் கைகலப்பாக மாறி இருக்கிறது.

பாலகிருஷ்ணன் கீழே தள்ளி அடித்து உடைத்திருக்கிறார் கணேசன். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார். இதை பார்த்து பதறிய அப்பகுதியினர் புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

புளியங்குடி போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனை புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதிக்க மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பாலகிருஷ்ணன் உயிரிழந்ததை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்துள்ளனர்.

திருமணமாகாத வாலிபர் மனைவியிடம் அடிக்கடி பேசி வந்ததால் ஆத்திரத்தில் கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் புளியங்குடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us