பிரிட்டன் தனது போர் கப்பலை உக்கிரைன் கடல் பரப்புக்கு அனுப்பி- கோதுமை தானிய கப்பலுக்கு பாதுகாப்பு கொடுக்க உள்ளது !

இந்த செய்தியை பகிருங்கள்

உக்கிரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த நாளில் இருந்து, அன் நாட்டில் இருந்து கோதுமை தானிய ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. அத்தோடு சூரிய காந்தி எண்ணை ஏற்றுமதியும் தடைப்பட்டுள்ளது. உலகில் கோதுமை மற்றும் சூரிய காந்தி எண்ணையை ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடு உக்கிரைன். அன் நாட்டில் உள்ள போட் -ஒடிசி என்ற ஒரே ஒரு துறைமுகத்தை கைப்பற்றிய ரஷ்யா. உலகிற்க்கு கோதுமை செல்வதை தடுத்து வருகிறது. இதனால் பல உலக நாடுகள் கோதுமை இன்றி தவித்து வரும் நிலையில். பிரித்தானியா மட்டும் துணிந்து களத்தில் இறங்குகிறது… பிரித்தானியா தனது அதி நவீன போர் கப்பலை உக்கிரைன் கடல் பரப்புக்கு அனுப்பி. அன் நாட்டில் இருந்து வெளியே செல்லும் தானியம் அடங்கிய கப்பலுக்கு பாதுகாப்பு கொடுக்க இருக்கிறது. இதில் ….

வெளியேறும் தானியக் கப்பல்களுக்கு பிரித்தானிய கொடி பறக்க விடப்பட உள்ளதோடு. அந்த கப்பல்களுக்கு பிரித்தானிய கடல் படை பாதுகாப்பு கொடுக்கவும் உள்ளது. இதனால் ரஷ்யா குறித்த கப்பல்களை தாக்கினால், உடனடியாக பிரித்தானிய கப்பல் படை ரஷ்ய கப்பல்படையை தாக்க நேரிடும். இதற்கான ஒப்புதலை பிரித்தானிய அமைச்சரவை வழங்க உள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இது இவ்வாறு இருக்க, உக்கிரைனின் கோதுமை தானியத்தை மட்டுமே நம்பி இருக்கும் முழு அரபு நாடுகளும், பிரித்தானியாவின் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளார்கள். உணவு என்ற விடையத்தால், பல நாடுகள் பிரித்தானியாவின் இந்த துணிச்சலான செயலுக்கு, ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. Source MOD : British warships could be sent in to protect freighters carrying crucial Ukrainian grain and break Putin’s blockade of Black Sea ports that is threatening to cause a world food crisis:


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us