The virus, known as Vaxinia: முதன் முறையாக மனிதருக்கு ஏற்றப்பட்ட கான்சரைக் கொல்லும் வைரஸ் ஊசி:

இந்த செய்தியை பகிருங்கள்

மனித வரலாற்றில் முதல் தடவையாக, இந்த ஊசியை ஒரு மனிதருக்கு செலுத்திப் பார்த்துள்ளது மருத்துவ உலகம். பல மிருகங்களில் இதனைப் பரிசோதனை செய்த பின்னர் முதல் தடவையாக கேன்சர்(புற்று நோய்) உள்ள நபருக்கு இந்த ஊசி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் காணப்படும் வேக்சினியா என்னும் வைரஸ், உடலில் உள்ள கேன்சர் செல்களை மட்டும் இனம் கண்டு பிடித்து அதனை தாக்கி அழிக்க வல்லவை. Vaxinia, (full name CF33-hNIS VAXINIA),is a type of ‘oncolytic virus’ – a virus found in nature that has been genetically modified specifically to fight cancer. அவை வேறு எந்த ஒரு செல்லையும்….

தாக்காது. மிகவும் நுட்ப்பமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வேக்சீனியா வைரஸ், மனித குலத்தை 100 ஆண்டுகள் வாழ வைக்கும் அபூர்வ மருந்து என்று பலராலும் வர்ணிக்கப்படுகிறது. பெண்கள் உடலில் ஏற்படும் மார்பு புற்று நோய், கருப்பை புற்று நோய், மற்றும் கணையப் புற்று நோய், ஆண்களுக்கு விதைப் பைகளில் ஏற்படும் புற்று நோய் என்று பல வகையான புற்று நோய்களை இது குணப்படுத்த வல்லது என்கிறார்கள். இருப்பினும் இந்த ஊசியை எடுத்துக் கொண்ட நபர், எவ்வாறு குணமடைகிறார் என்பதனை பார்த்தே மேலதிக விடையங்களை தர முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இயற்கையாக காணப்படும் இந்த வேக்சினீயா வைரசை எடுத்து, அதனை மாற்றி அமைத்துள்ளார்கள் மருத்துவர்கள்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us