எந்தப் புற்றில் எந்தப் பாம்பு ? பிரபல BBC செய்தி வாசிப்பாளர் போனில் சிறுமிகளின் புகைப்படங்கள் !

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு ? பிரபல BBC செய்தி வாசிப்பாளர் போனில் சிறுமிகளின் புகைப்படங்கள் !

பிரித்தானியா மட்டும் அல்ல, உலக அளவில் மிகப் பிரபல்யமானவர், எட்வாட்ஸ். இவர் இரவு நேர செய்தி வாசிப்பாளர். 66 வயதாகும் எட்வாட்ஸ் மெற்றோ பொலிடன் பொலிசாரால், கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மோபைல் போனில் மட்டும் சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் இருந்துள்ளது. அதைத் தவிர அவரது வீட்டில் உள்ள கம்பியூட்டரில் மேலும் பல சிறுமிகளின் புகைப்படங்கள் இருந்துள்ளது. இந்தச் செய்தி அவரது குடும்பத்தை மட்டும் அல்ல, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

திருமணம் முடித்து 5 பிள்ளைகளின் தந்தையாக இருக்கும் எட்வாட்ஸ் இப்படியான நபரா ? என்று பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்குத் தெரியும் என்பார்களே அது போல உள்ளது இந்தக் கதை.

தற்போது பிணையில் விடுதலையாகியுள்ள எட்வாட்ஸ் மீது பொலிசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள். இனி நீதிமன்றில் விசாரணை நடைபெற்று, தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.