BREAKING NEWS: சற்று முன்னர் பாலஸ்தீன் அரசியல் தலைவரை ஈரானில் வைத்துக் கொலை செய்துள்ள இஸ்ரேல் மொசாட்

BREAKING NEWS: சற்று முன்னர் பாலஸ்தீன் அரசியல் தலைவரை ஈரானில் வைத்துக் கொலை செய்துள்ள இஸ்ரேல் மொசாட்

சற்று முன்னர் ஈரானில், ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் நாட்டில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துகொள்ள, கட்டாரில் இருந்து இஸ்மைல் ஹயானிக் தெகிரான் சென்றிருந்தார். அவர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு. பின்னர் பாதுகாப்பாக வேறு ஒரு இடத்திற்கு சென்றுகொண்டு இருந்தவேளை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பாலஸ்தீன ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஒரு போர் நிறுத்தம் வர வேண்டும் என்று, கடுமையாக பாடுபட்டுக்கொண்டு இருந்தவர் இஸ்மைல் ஹயானிக். இன் நிலையில்..

இஸ்ரேல் மொசாட் படை இவர் மீது தாக்குதல் நடத்தி ஈரானில் வைத்துக் கொலை செய்துள்ள விடையம் உலகை உலுக்கியுள்ளது. இது அமெரிக்காவையும் கவலையடைய வைத்துள்ளது. காரணம் அமெரிக்காவின் சொல்-பேச்சை கேட்க்காமல் இஸ்ரேல் அதிபர் செயல்பட்டு வருகிறார். இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் நித்தின்யாஹு, பைடன் சொல்வது எதனையும் கேட்ப்பதாக இல்லை.

ஈரானில் இந்தச் சம்பவம் நடந்ததால், ஈரான் நாட்டின் இறையாண்மைக்கு இது ஒரு பெரும் அவப்பெயர் ஆகும். ஈரான் உடனடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது. மேலும் ஈரான் 3 நாட்களுக்கு தேசிய துக்க தினத்தையும் அறிவித்துள்ளது.