உக்ரைனில் சிக்கியுள்ள மகனை நினைத்து ஏங்கி உயிரைவிட்ட தமிழ் தாய் பெரும் சோகம் !

இந்த செய்தியை பகிருங்கள்

ரஷ்யா – உக்ரைன் இடையே கடும் போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மகனை நினைத்து தமிழ்நாட்டில் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் தமிழ்நாட்டின் ஆம்பூர் அருகே இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாவட்டம் ஆம்பூர் அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சக்திவேல், உக்ரைன் நாட்டின் முஜைல் பகுதியில் உள்ள கல்லூரியில் மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகிறார். சக்திவேலின் பெற்றோரான சங்கர் மற்றும் சசிகலா ஆகியோர் அவர்களின் கிராமத்தில் விவசாய வேலை செய்து வருகிறார்கள். இதனிடையே உக்ரைனில் நடைபெற்று வரும் போர் பகுதியில் சிக்கியுள்ள தனது மகனை நினைத்து சசிகலா பெரும் துயரில் ஆழ்ந்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை சசிகலா எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்படி சக்திவேல் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில், தாயின் இறுதி சடங்குகளை இளைய மகன் செய்ய வேண்டிய நிலையில் சக்திவேல் நாடு திரும்ப முடியாமல் வீடியோ காலில் தாயின் உடலை பார்த்து கதறி அழுத நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us