Prince Harry’s US visa drugs lawsuit is set for first court hearing since Donald Trump’s inauguration – after US president said he ‘wouldn’t protect’ Prince Harry:
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே உள்ள சிறப்பு ஒப்பந்த அடிப்படையில், ஒரு மரியாதை நிமிர்த்தம் 2 காவலர்களை அமெரிக்க அரசு, இளவரசர் ஹரிக்கு கொடுத்து இருந்தது. இதனை ரம் அரசு சடுதியாக நிறுத்தி விட்டது. உங்களுக்கு மக்கள் வரிப் பணத்தில் இருந்து பாதுகாப்பு தர முடியாது என்று ரம் அரசு மறுத்துவிட்ட நிலையில். ஹரி மிகவும் கடுப்பாகியுள்ளார். இது இவ்வாறு இருக்க அமெரிக்க விசா நீடிப்பும் திடீரென தடைப்பட்டுள்ளது.
இளவரசர் ஹரிக்கு பிரித்தானிய பாஸ்போட், அவர் திருமணம் செய்த மெகான் மார்கிளுக்கு அமெரிக்க பாஸ்போட் உள்ளது. இதுவரை காலமும் விசாவை நீடித்துக் கொண்டு காலத்தை கழித்தார் ஹரி. ஆனால் தற்போது அமெரிக்காவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில். விசாவை புதுப்பிக்கவே பெரும் பாடாக உள்ளது. இதனால் இளவரசர் ஹரி நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் வரும் என்கிறார்கள்.
ஹரி அமெரிக்க பாஸ்போட்டை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபரான டொனால் ரம், பிரித்தானிய அரச குடும்பத்தை மதிப்பதே இல்லை. மேலும் சொல்லப் போனால் ஒரு பெரும் ஈகோ அவருக்கு உண்டு. இதனால் இது நாள் வரை அமெரிக்காவில் இளவரசர் ஹரிக்கு கிடைத்து வந்த சலுகைகள் இனிக் கிடைக்காது என்று கூறப்படுகிறது. பைடன் அரசு , பிரித்தானிய மகாராணியின் குடும்பத்தோடு நல்ல உறவில் இருந்தார்கள்.
மேலும் இளவரசர் ஹரிக்கும் மெகான் மார்களுக்கும் இடையே பூசல் வெடித்துள்ளதாக சர்சைக்குரிய கருத்துகள் வெளியாகி வருகிறது. ஹரி மீண்டும் லண்டன் வந்து குடியேற உள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபடும் நிலையில். இனி என்ன நடக்க உள்ளது என்று பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.