2008ல் புலிகள் எப்படி சீமானுக்கு பயிற்ச்சி கொடுத்திருக்க முடியும் ? சிவாஜிலிங்கம் கேள்வி !

விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது, உறவினரும் முன் நாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு சிவாஜிலிங்கம் அவர்கள் சீமான் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை. பல இடங்களை ஏற்கனவே விடுதலைப் புலிகள் இழந்து நின்றார்கள். போரின் உக்கிரம் பற்றி தலைவர் நன்றாக அறிந்திருந்தார். இருப்பினும் “எல்லாளன்” படத்தை எடுக்கவேண்டும், என்ற ஒரே காரணத்திற்காக தான், தலைவர் தமிழ் நாட்டு கலைஞர்களை அழைத்தார்.

அந்த நெருக்கடியான நேரத்தில், சீமானுக்கு புலிகள் ஆயுதப் பயிற்ச்சி கொடுக்க வாய்ப்பே இல்லை என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தலைவர் சீமானுடன் எல்லாளன் படம் தொடர்பாகவே உரையாடினார். சீமான் ஒரு இயக்குனர் என்ற வகையில் தான், தேசிய தலைவர் உரையாடினாரே தவிர. அந்த நேரத்தில் சீமான் என்பவர் ஒரு அரசியல்வாதி அல்ல, என்று அழுத்தம் திருத்தமாக சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் சிலருக்கு, புலிகள் தமது துப்பாக்கிகளை காட்டுவது வழமை என்றும்.

அது எப்படி இயங்குகிறது என்று ஆர்வம் காட்டும் நபர்களுக்கு மட்டுமே, புலிகள் தமது துப்பாக்கியை கொடுத்து அது எப்படி வேலை செய்கிறது என்று சொல்வார்கள். அது பயிற்ச்சி என்று ஆகிவிடாது என்று முன் நாள் MP சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதனூடாக நடக்காத பல விடையங்களை , நடந்தது போல பேசி வரும் சீமானின் உண்மை ரூபம் தெரியவந்துள்ளது. இவரை எப்படி ஈழத் தமிழர்கள் நம்புவது என்ற பெரும் கேள்விக் குறியும் எழுந்துள்ளது.

தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று, பொய்களை கட்டவிழ்த்து விடும் சீமானை எப்படி நம்புவது ? இவர் ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்யப் போகிறார் ? இவரிடம் ஏதாவது ஒரு வரைபடம் உள்ளதா ? கையில் ஒரு தீர்வுத் திட்டம் உள்ளதா ? இல்லை பல வெளிநாட்டு தூதுவர்களின் தொடர்பு உள்ளதா ?இல்லையே … இதனை விட புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் மிகவும் சக்தி மிக்கவர்களாக இருக்கிறார்கள். நினைத்தால் பிரிட்டன் பிரதமரை, கனேடிய அதிபரை, இல்லையேல் நோர்வே அதிபரை சந்திக்கும் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஏன் சீமானிடம் சென்று பிச்சை ஏந்தவேண்டும் ? 

காரணம் YouTube தான். இதனைப் …பார்த்துப் …பார்த்து… பேச்சைக் கேட்டு.. சிலர் இந்த வட்டத்தில் தன்னையும் அறியாமல் விழுந்து. ஒரு கிணற்று தவக்கை போல ஆகிவிட்டார்கள். சீமான் வந்து தமிழ் ஈழம் வாங்கித் தருவார் என்ற கனவில் உள்ளார்கள். இந்த முட்டாள்கள் எப்பொழுது தான் திருந்தப் போகிறார்கள் ?