சர்வதேச நாணயத்திற்கு எதிராக இலங்கை நாணயத்தில் ஏற்பட்ட மாற்றம்

இந்த செய்தியை பகிருங்கள்

சர்வதேச நாணயங்களுக்கு நிகரான ரஷ்ய நாணயமான ரூபிள் பெறுமதி சுமார் 28 சதவீதத்தினால் வீழ்த்தியடைந்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ஆரம்பித்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரத் தடையையத் தொடர்ந்து, இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வார இறுதி நாாளா நேற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது அணுவாயுத படைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து ரஷ்ய நாணயத்தின் பெறுமதி எதிர்பாராத அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச சந்தைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது ரஷ்ய நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வாரம் 2.66 ரூபாயாக ஆக இருந்த ரஷ்ய ரூபிள் இன்றைய தினம் 2.39 ரூபாயாக பதிவாகியுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us