அமெரிக்காவில் என்ன தான் நடக்கிறது என்பது தெரியவில்லை… சிலவேளைகளில் டொனால் ரம் சொல்வது சரிதானா ? ஜஸ்டின் கோல்டன் என்ற 20 வயது ஆபிரிக்க இன அப்பா, தனது 8 மாதமே ஆன கைக் குழந்தையை நடு வீதியில் படுத்தி விட்டு தனது காரை ஏற்றி, அந்தக் குழந்தையைக் கொன்ற சம்பவம் , நாட்டையே உலுக்கியுள்ளது.
அமெரிக்காவின் புளோஃரிடா மாநிலத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்தேறியுள்ளது. இது போல இவர் செய்ய என்ன காரணம் என்று இதுவரை பொலிசாருக்கு தெரியவில்லை. குறித்த நபரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளார்கள்.
தலை முடி வெட்டும் நிலையம் ஒன்றில் இருந்து, ஜஸ்டின் கோல்டன் வெளியே ஓடி வந்ததாகவும். அவர் கையில் ஒரு குழந்தை இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் தெரிவித்துள்ளார். அதேவேளை குழந்தையின் அம்மா கதறியபடி ஓடி வந்ததாகவும். ஆனால் அவர் காரால் குழந்தையை இடித்து விட்டதாகவும் மேலும் அந்தப் பெண் கூறியுள்ளார்.