பிணமாக இருந்த நபர் சவப்பெட்டியில் வைத்து கண்ணைத் திறந்த சம்பவம்: உலுக்கும் வீடியோ !

டொமினிக்கன் ரிபப்ளிக் நாட்டில், இறந்து போன ஒரு மனிதர், தனது கண்களை திறந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் இறந்த பின்னர் அவரது உடலை வைத்தியசாலை வட்டார ஊழியர்கள், பொது இடம் ஒன்றுக்கு கொண்டு வந்து இருந்தார்கள்.

அங்கே அவருக்கு ஈமைக் கிரிகைகள் நடந்து கொண்டு இருந்தது. அவருடைய நலன் விரும்பிகள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் அங்கே கூடி இருந்தவேளை. அன் நபர் கண் சிமிட்ட ஆரம்பித்தார். அத்தோடு அவரது கண்கள் திடீரென திறந்து கொண்டது. இதனால் அனைவரும் குழம்பிப் போனார்கள்.

கூட்டத்தில் நின்றிருந்த பலர், அவர் உயிருக்கு போராடுவதாகவும். உடனே மருத்துவர்களை அழைக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அவர் இறந்து விட்டார் என்பது தான் உண்மை. அவர் கண்கள் ஏன் திறந்து கொண்டது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. மருத்துவர்கள் சரியான காரணம் எதனையும் சொல்லவில்லை.   கீழே வீடியோ இணைப்பு.