உக்ரைனில் தமிழ் மாணவியின் கதறல்!! ஒரு மலசலகூடத்தை 500 பேர் பயன் படுத்துகின்றோம் …

இந்த செய்தியை பகிருங்கள்

உக்ரைனில் தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தின் மோசமான நிலையை விளக்கி தமிழக மாணவி வீடியோ வெளியிட்டுள்ளார். அதன்படி மெட்ரோ சுரங்கத்தில் 300 பேரிலிருந்து 500 பேர் வரை ஒரே கழிவறையைப் பயன்படுத்தி வருவதாக அந்த மருத்துவ மாணவி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அங்கு ஒரேயொரு கழிவறை உள்ள நிலையில், போதிய தண்ணீரும் இல்லாமல் அத்தனை பேரும் அதனை 3 நாட்களாகப் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நோய்த்தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும், இந்த மோசமான மற்றும் அருவருப்பான நிலை இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது தனக்கு தெரியவில்லை எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். தங்களுடைய தற்போதைய சூழலை விளக்கி, மனிதாபிமானத்தை விட பெரியது ஒன்றும் இல்லை என்றும் எனவே போரை நிறுத்துமாறும் ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் மன்றாடி கேட்டு கொண்டுள்ளார் அப்பெண்..!


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us