ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரி உட்பட மூன்று பேரை, இலங்கை அரசு இன்று வரை எதுவுமே செய்யவில்லை. இந்தக் கொலையை நோண்ட நோண்ட கடைசியாக மாட்டிக்கொள்ளப் போவது ராஜபக்ஷ குடும்பத்தில் உள்ள முக்கிய புள்ளி தான். அது வேறு யாரும் அல்ல கோட்டபாய ராஜபக்ஷ தான்.
இந்த வழக்கை தற்போது அனுரா, தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ள விடையம், ராஜபக்ஷர்களை கிலி கொள்ள வைத்துள்ளது. நில ஊழல் வழக்கில் நமால் சிக்கியுள்ளார், இதேவேளை யோசித ராஜபக்ஷவும் தற்போது ஒரு வழக்கில் சிக்கியுள்ள நிலையில். அடுத்து கோட்டபாயவை உள்ளே தள்ள அனுரா திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது போர் குற்றவாளி என்று, கோட்டபாயவை உள்ளே தள்ளினால். அனுராவுக்கு சிங்கள மக்களிடையே உள்ள செல்வாக்கு சரியும்.
இதேவேளை மீண்டும் ராஜபக்ஷர்கள் உயிர்பெற்று விடுவார்கள். இதனால் லசந்த வழங்கை, கையில் எடுத்து கோட்டபாயவை உள்ளே வைத்தால், தமிழர்களின் ஆதரவு இன்னும் பல ஆண்டுகளுக்கு அனுராவுக்கு கிடைக்கும் என்பது அவர் கணக்காக இருக்க கூடும் என்று, ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் கொலை வழக்கு இன்று வரை நிலுவையில் உள்ளது. என்பது குறிப்பிடத்தக்க விடையம்.