Priyanka can’t keep her eyes off husband : இன்று வரை கட்டுக் குலையாமல் இருக்கும் பிரியங்கா சோப்ரா

மும்பையில் தனது சகோதரர் திருமணத்தில் கணவர் நிக் ஜோனாஸுடன் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.  42 வயதான பிரியங்கா, மின்னும் நீல நிற உடையில் அனைவரையும் கவர்ந்தார்.  தனது கணவர் நிக் ஜோனாஸ் மீது அவர் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த காதல் பார்வையை எவராலும் உணர முடியும்.

விழாவிற்காக, பிரியங்கா தனது கட்டுடலை வெளிப்படுத்தும் வகையில், ஜொலிக்கும் சீக்வின் டூ-பீஸ் அணிந்திருந்தார்.  க்ராப் பிராலெட் மற்றும் தரை வரை நீளும் பாவாடைக்கு மேல், மெல்லிய ஜொலிக்கும் ஸ்கார்ஃபையும் அணிந்து தனது தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்த்தார்.

அணிகலன்களுக்காக, பிரியங்கா பெரிய வெள்ளி நெக்லஸ், பொருத்தமான காதணிகள் மற்றும் பருமனான வெள்ளி வளையல் அணிந்திருந்தார்.  பாரம்பரிய தோற்றத்தை நிறைவு செய்யும் வகையில், கைகளில் மெஹந்தி டிசைன்களையும், விரல்களில் வெள்ளி மோதிரங்களையும் அணிந்திருந்தார்.

அருகில் நின்ற நிக், நீல வெல்வெட் பாரம்பரிய உடை ஜாக்கெட்டில் கம்பீரமாக காணப்பட்டார்.  32 வயதான நிக், மனைவியுடன் பொருத்தமாக இருந்தார்.