“மட்ட” G.O.A.T படத்தின் 4வது பாடல் நாளை ரிலீஸ் – உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

“மட்ட” G.O.A.T படத்தின் 4வது பாடல் நாளை ரிலீஸ்  – உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

டிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது.

இரட்டை வேடத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். அவர்களுடன். லைலா, பிரசாந்த் , பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியான நிலையில் நான்காவது பாடல் குறித்த அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதன்படி G.O.A.T படத்தின் “மட்ட” என்கிற 4வது பாடல் நாளை வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் அலார்ட் ஆகியிருக்கிறார்கள்.

கோட் பாடல் , விஜய் , கோட் பாடல், நடிகர் விஜய் Actor vijay ,