லண்டனில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், கேள்விப்பட்டால் இப்படி யெல்லாமா நடக்கும் என்று எண்ணத் தோன்றும். தெல்லிப்பளையை பிறப்பிடமாகக் கொண்ட (நிரோஷா – பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்தப் பெண் லண்டனில் வசித்து வருகிறார். இவர் எப்படித் தான் தொலைபேசி இலக்கங்களை எடுக்கிறார் என்று பார்த்தால். அது செத்த வீடுகளை போடும் இணையங்களில் இருந்து. சில இலக்கங்களை எடுக்கும், நிரோஷா முதலில் அவர்களுக்கு அழைப்பை விடுத்து, பேசுவதும் பின்னர் மாறி அடித்து விட்டதாகவும் கூறுவார்.
அதன் பின்னர் வேலை இருக்கா ? சரியாக கஷ்டப்படுகிறேன் என்று பேசி, வழிய ஆரம்பிப்பார். இதனால் சில இளகிய மனம் கொண்ட ஆண்கள்… அல்லது இது நல்ல சான்ஸ் போல இருக்கே என்று நினைக்கும் ஆண்கள் இவர் வலையில் விழுவது உண்டு. முதலில் காஃபி ஷப்பில் அழைத்து பேசுவார். பின்னர் அவர் பேசும் போது அட்ஜெஸ்மென் ஓகே என்பார். இதனால் சிலர், இந்தப் பெண்ணை கரக்ட் பண்ணலாம் என்றும் நினைப்பார்கள்.
அப்பொழுது தான் இவர் தனது ஆட்டத்தையே தொடக்குவார். சமீபத்தில் இப்படித் தான் ஒரு குடும்ப நபர் இந்த நிரோஷாவிடம் சிக்கி , சின்னாபின்னம் ஆகியுள்ளார். வேலை எடுத்து தருவதாக பேசிவந்த அந்த குடும்பஸ்தார், நிரோஷா பேச்சில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று அறிந்து விலகிச் செல்ல முற்பட்டவேளை. அவர் வீட்டில் மனைவியோடு உள்ள தருணம் பார்த்து, வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார் அந்த பாக்கிஸ்தான் பயலோடு. இதனால் மிரண்டு போன அந்தக் குடும்பஸ்தர் என்ன செய்வது என்று தெரியாமல் ஈரக் குலை நடுங்க நின்றுள்ளார்.
நிரோஷா 5,000 பவுண்டு தாருங்கள் சென்று விடுகிறேன் என்று பேரம் பேச. இறுதியாக பொலிசாரிடம் முறையிட குடும்பஸ்தர் முனைந்துள்ளார். இதேபோல மீண்டும் ஒரு நாள் நிரோஷா வீட்டுக் கதவை தட்ட, அவர் தனது மோபைல் தொலைபேசியில் 999க்கு தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு அப்படியே வெளியே வந்து, தன்னை தொல்லை செய்யும் பெண், இதோ நிற்கிறார் என்று சொல்லி, நிரோஷாவை பொலிசாருடன் பேசச் சொல்லி இருக்கிறார். இதனால் நிரோஷா மிரண்டு போய் அப்படியே ஓடி விடுவார் என்று குடும்பஸ்தர் நினைத்துள்ளார். ஆனால்…
ஆனால் அங்கே தான் பெரும், ஆப்பு காத்திருந்தது. பயந்து ஓடாமல் நிரோஷா, போனை வாங்கி என்னை இவர் கற்பழிக்க முயன்றார் என்று பிளேட்டை அப்படியே திருப்பிப் போட… கிணறு தோண்ட பூதம் புறப்பட்ட கதையாக மாறிவிட்டது, இந்த குடும்பஸ்தர் நிலை. இதில் போதாக் குறைக்கு மனைவி வேறு ” என்னப்பா வெளியில் செய்யிறியள்” என்று கத்தி… கூப்பாடு போட… அவசரமாக நிரோஷாவிடம் இருந்து போனைப் பறித்த நபர். அந்தப் பெண் மது போதையில் இருப்பதாக பொலிசாரை சமாதானப்படுத்தியுள்ளார்.. அரை குறை ஆங்கிலத்தில் நிரோஷா, இல்லை இல்லை என்று கத்த… அங்கே பெரும் குழப்பம் தான் !
இறுதியாக தன்னால் முடிந்த பணத்தை நிரோஷாவிடம் கொடுக்து, அம்மா இனி இந்தப் பக்கம் வந்து விடாதே என்று அனுப்பியுள்ளார், அந்த பெரிய மனுஷன். ஒரு தப்பான போன் கால் பேசியதால் இப்படியா டா ? போதுமடா சாமி.! முடிந்தவரை இதனை பகிருங்கள், இது உண்மைச் சம்பவம். வேறு எவருக்கும் நடந்து விடக் கூடாது.