சீமானை ஒரு பொருட்டாகவே எடுக்காத TVK தலைவர் விஜய்: பெரியாரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார் !

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தமிழ் நாட்டில் பல கட்சிப் பிரமுகர்கள்,  நாளுக்கு நாள் வந்து TVK கட்சியில் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் நாட்டில் கவனம் தன் மீது திரும்ப வேண்டும் என்ற சுயநலத்தில், சீமான் அவர்கள், பெரியாரைப் பற்றி அவதூறு பேசி அதனூடாக பரபரப்பு தேடி வருகிறார். 

முதல்வர் ஸ்டாலின் தொடக்கம், பல கட்சிகளின் தலைவர்கள், சீமானைக் கண்டிக்க தவறவில்லை. ஆனால் இதுவரை விஜய் சீமான் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவே இல்லை.

இதனால் சீமானின் தம்பிகள் சிலர், விஜய் சீமான் கருத்தை ஆதரிப்பதாக கூறி வலையத்தளங்களில் பதிவுகளை போட்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் சரியான பதிலை TVK தலைவர் விஜய் அவர்கள் கொடுத்துள்ளார்.

இன்று(02) அவர் பெரியார் உருவச் சிலையை வணங்கி விட்டு தனது அரசியல் வேலைகளில் ஈடுபடத் தெடங்கிய புகைப்படங்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அவர் தனது அலுவலகத்தில் 5ம் பெரும் தலைவர்களது உருவச் சிலைகளை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.