இந்த விண் கல், பூமியைக் கடந்து போகும் ஆபத்து எதுவும் இல்லை என்று முன்னர் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்த நிலையில். தற்போது தாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று நாசா மீண்டும் ஒரு மிரட்டலான அறிவிப்பை விடுத்துள்ளது.
டிசம்பர் 22, 2032 அன்று, பூமியைத் தாக்கக்கூடிய ஒரு பெரிய கோள் (ஆஸ்டராய்டு) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள் பூமியைத் தாக்கும் அபாயம் சற்று அதிகரித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த கோள், பூமியைத் தாக்கினால், ஒரு பெரிய நகரத்தை அழித்துவிடும் அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோளுக்கு “2024 YR4” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுமார் 200 அடி அகலம் கொண்டது. முதலில் நாசா இந்த கோள் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 1.2 சதவீதம் (83-ல் 1 வாய்ப்பு) என்று மதிப்பிட்டிருந்தது. ஆனால், இப்போது நாசாவின் ‘சென்ட்ரி’ அமைப்பு (Sentry Earth Impact Monitoring System) இந்த வாய்ப்பு 1.3 சதவீதமாக (77-ல் 1 வாய்ப்பு) சற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த கோள் தென் அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் சஹாரா ஆப்பிரிக்கா பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பரந்த பகுதியைத் தாக்கக்கூடியது என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இது 1908-இல் பூமியைத் தாக்கிய ஒரு கோளின் அளவை ஒத்துள்ளது.
அந்த கோள் தாக்கிய போது, 5 கோடி டன் TNT வெடிபொருளுக்கு சமமான வெடிப்பு ஏற்பட்டது. இதே போன்று, 2024 YR4 கோளும் பூமியைத் தாக்கினால், குறிப்பாக மக்கள் அடர்த்தியான நகரங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியது.
இருப்பினும், விஞ்ஞானிகள் இது குறித்து பரபரப்படைய வேண்டியதில்லை என்று தெரிவிக்கின்றனர்.