:::::::::::::::::Up Dateed News : 20 Mins AGO ::::::::::::::PHOTO
காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதோடு, மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை.சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
::::::::::::::::முந்தைய செய்தி :::::::::::::::::::::
சற்று முன்னர், இலங்கை நேரப்படி, அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் T56 ரக துப்பாக்கியால் 3 பேர் மீது சுட்டுள்ளார்கள். Point Blank ரேஞ்சில் அவர்கள் சுட்டுள்ளார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
காலி பகுதியில் உள்ள, Panangala area in Hiniduma என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே அந்த 3 பேரும் கொல்லப்பட்டுள்ளார்கள். முதல் கட்டமாக அங்கே இருந்த தோட்டாகளின் ரவைகளை வைத்து எந்த வகையான துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது என்று பொலிசார் விடையத்தை வெளியிட்டுள்ளார்கள்.
சுட்டவர்களை கண்டு பிடிக்க பொலிசார் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக எமது கொழும்பு செய்தியாளர் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். சில வாரங்களாகவே இலங்கையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சிறிய காணிப் பிரச்சனை, வாக்கு வாதம் என்று எதற்கு எடுத்தாலும் துப்பாக்கி கொண்டு சுட்டுக் கொள்கிறார்கள். இல்லையே அடியாளை வைத்து துப்பாக்கியால் சுடச் செய்கிறார்கள்.