PAT 25 என்ற ரகசியக் குறியோடு இந்த ஹெலி வியாழக்கிழமை வானில் பறந்துள்ளது. என்றால் PAT 25 , Priority air transport என்று அர்த்தம். அதாவது மிக முக்கிய புள்ளி ஒருவரை ஏற்றிச் செல்லும் ஹெலி என்று அர்த்தம்.
இந்த ராணுவ ஹெலியானது Black Hawk வகையைச் சார்ந்தது. பாதுகாப்பு அம்சங்கள் பல உள்ளது. எதிரியின் ஏவுகணையை முன்னரே கண்டறியும். அதில் ராடர் திரை உள்ளது. இப்படி இருக்கையில் முன்னால் ஒரு விமானம் வருவதை குறித்த Black Hawk ஹெலி ஏன் கண்டு பிடிக்கவில்லை என்ற கேள்விகள் எழுகிறது.
Black Hawk ஹெலியோடு மோதிய விமானம் போயிங் விமானம். இதிலும் ராடர் திரை உள்ளது. விமானியும் நிச்சயம் ஒரு ஹெலி முன்னால் வருவதை அவதானித்து இருப்பார். அப்படி இருக்கையில் இது எப்படி நடந்தது ? எப்படி இரண்டு விமானிகளும் பிழை விடுவார்கள் ? என்பது தான் மக்களின் கேள்வியாக உள்ளது.
இதில் இரண்டு விடையங்கள் உள்ளது. உண்மையில் இது ஒரு விபத்தாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு சதி நடவடிக்கை தான். அமெரிக்காவுக்கு வேண்டப்படாத ஆனால் முக்கிய நபர் யாரோ ஒருவர் இருந்துள்ளார் அந்த ஹெலியில். அவரை போட்டுத் தள்ள FBI அல்லது CIA எடுத்த ஆப்பரேஷனாக இது இருக்க வாய்ப்புகள் உள்ளது.