இன்றைய சூழலில் சினிமாவில் ஐட்டம் சாங் என்பது குறைக்கப்பட்டு படத்தின் நாயகிகள் கவர்ச்சியுடன் நடனமாடி வருகின்றனர். ஆனால் ஒரு காலத்தில் படத்தின் ஐட்டம் சாங்க்காகவே சில நடிகைகள் தூக்கி நிறுத்தப்பட்டு அவர்களாலேயே படங்கள் ஓடிய காலமும் உண்டு. அப்படியான தமிழ் திரை உலகை தன் கவர்ச்சி நடனத்தால் தூக்கி நிறுத்திய நடிகைகள் சிலர்,
டி ஆர் ராஜகுமாரி: கருப்பு வெள்ளை காலத்தில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்த டி ஆர் ராஜகுமாரி தனது கிரங்கடிக்கும் அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். சந்திரலேகா படத்தின் டைட்டில் கார்டில் முதன் முதலாக அச்சிடப்பட்ட பெயர் டி ஆர் ராஜகுமாரி ஆகத்தான் இருக்கும். தமிழ் சினிமாவில் இரு பெரும் ஜாம்பவான்களான எம்ஜிஆர் சிவாஜி ஒன்றாக நடிக்க வைத்த படத்தின் தயாரிப்பாளர் டி ஆர் ராஜகுமாரி தான். மாபெரும் புகழோடு வாழ்ந்தவர் இறுதிவரை திருமணம் செய்யாமலேயே இருந்தார் என்பதுதான் இவரது சோகம்.
ஜெயமாலினி: சமீபத்தில் தனது 65 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய ஜெயமாலினி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் கவர்ச்சியில் உச்சம் தொட்டநாயகி ஆவார். வேகமாக ஆட கூடிய திறன் கொண்டிருந்த ஜெயமாலினி “விட்டாலாச்சாரியாரின் ஜெகன் மோகினி” மூலம் புகழின் உச்சமடைந்தார். 70 மற்றும் 80களில் சினிமாவில் இவரது ஐட்டம் சாங் காகவே ரசிகர்கள் படத்தை பார்க்க துவங்கினர்.
சில்க் ஸ்மிதா: பாலு மகேந்திராவால் “திராவிட பேரழகி” எனப் போற்றப்பட்ட சில்க் சுமிதாவின் கால் சீட்டுக்கு தமிழ் திரையுலகமே காத்துக் கிடந்தது எனலாம். விநியோகஸ்தர்கள் சிலுக்கு சுமிதாவின் பாட்டு இருக்கா என்று கேட்டு படத்தை வாங்கும் அளவுக்கு தவிர்க்க முடியாத கனவு கன்னியாக இருந்துள்ளார் சில்க் ஸ்மிதா.
அனுராதா: 80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பாடல்களுக்கு கவர்ச்சியாக ஆடி ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் அனுராதா. 700 படங்களுக்கு மேல் நடித்திருந்த இவரின் விட்டிற்கு தினமும் இரண்டு மூட்டை அளவு ரசிகர்கள் கடிதம் வருமாம். ரசிகர்களின் கடிதங்களுக்கு கைப்பட பதில் எழுதிய அனுராதா தற்போது சீரியல்களில் வில்லியாக மிரட்டி விடுகிறார்.
மும்தாஜ்: டி ராஜேந்தர் இயக்கத்தில் மோனிஷா என் மோனலிசா என்ற படத்தில் 19 வயதில் அறிமுகமான பால் கொழுக்கட்டை தான் இந்த மும்தாஜ். குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலின் மூலம் தனது சிணுங்களால் ரசிகர்களை பந்தாடிய மும்தாஜ் இன்று வரை திருமணம் செய்யாமல் டேக்கா கொடுத்து வருகிறார்.