இதனை வைத்துப் பார்க்கும் போதே உக்ரைன், எந்த அளவு ரஷ்ய ராணுவம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்பது பற்றித் தெரிந்துகொள்ள முடியும். இன்னும் 552 இலங்கையர் ரஷ்ய ராணுவத்தில் உள்ளதாக மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விரிவாகப் பார்கலாம்.
உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி, நேற்று (07) பாராளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இதனை உறுதிப்படுத்தினார்.
மேலும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அறிக்கைகளின்படி, 554 இலங்கை நாட்டினர் உக்ரைனில் ரஷ்ய இராணுவ சேவையில் போருக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும், அவர்கள் கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனவரி 20, 2025 நிலவரப்படி, இந்த நபர்களில் மொத்தம் 59 பேர் போர்க்களத்தில் கொல்லப்பட்டுள்ளதை அமைச்சர் உறுதிப்படுத்தினார். இந்த குடிமக்கள் பற்றிய தகவல்களைத் தன்னிடம் வைத்திருப்பதாகவும், அவை பாராளுமன்ற ஹன்சார்டில் உள்ள பதிவுகளில் சேர்க்கப்படும் என்றும் ஹெராத் மேலும் கூறினார். இந்த தகவல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.