தூக்கத்தில் குழந்தை மீது புரண்டு படுத்த தாய்! மூச்சுத்திணறி பரிதாப பலி

இந்த செய்தியை பகிருங்கள்

தூக்கத்தில் குழந்தை மீது தாய் புரண்டு படுத்த தால் குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. இது கணவனுக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடுமே என்று நினைத்த தாய், குழந்தையை மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசி இருக்கிறார். போலீசாரின் விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இது இயற்கையாக நடந்த மரணமா? இல்லை திட்டமிட்ட செய்த கொலையா ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா. வழக்கறிஞரான இவரின் மனைவி சாந்தி. இத்தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதாக தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த குழந்தைக்கு 38 நாட்கள் ஆகி இருக்கிறது.

அந்த பச்சிளம் குழந்தை கடந்த 15 ம் தேதி அன்று காணாமல் போய்விட்டது என்று பெற்றோர்கள் தேடி இருக்கிறார்கள் . கடைசியில் மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்டெடுத்து இருக்கிறார்கள். குழந்தையை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பெற்ற தாய் மீது சந்தேகம் வந்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறா. ர் இதையடுத்து சாந்தி மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர் .

திருப்பரங்குன்றம் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை தூங்க வைத்து அருகில் நானும் படுத்து தூங்கினேன். அப்போது தூக்கத்தில் புரண்டு படுத்த போது குழந்தை மீது ப சாய்ந்து விட்டதால் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்த விட்டது. இது கணவருக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடுமே என்று நினைத்து உடனே குழந்தையை மாடியில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் வீசிவிட்டே என்று சொல்லியிருக்கிறார்.

சாந்தி சொல்வது உண்மைதானா? அல்லது திட்டமிட்டு அவர் கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us