அறைக்குள் சென்ற சிறுமி அதிர்ச்சி!காதலனுடன் 6 பேர் காத்திருந்த பயங்கரம்

இந்த செய்தியை பகிருங்கள்

காதலன் அழைக்கிறான் என்று அந்த அறைக்குள் சென்ற சிறுமிக்கு ஒரே அதிர்ச்சி. அங்கே காதலனுடன் நண்பர்கள் ஆறுபேரும் காத்திருந்தது கண்டு மிரண்டு போயிருக்கிறார். அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமில்லாமல் வீடியோ எடுத்து மிரட்டி வந்திருக்கிறார்கள். பணம் கேட்டு மிரட்டி வந்ததால் அந்த 7 பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.1

ராஜஸ்தான் மாநிலத்தில் தோல்பூர் பகுதியில் உள்ள அந்த 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் ஒருவன் காதலிப்பதாகச் சொல்லி வந்திருக்கிறான். கடந்த 14ஆம் தேதியன்று காதலியை வீட்டிற்கு வருமாறு அழைத்திருக்கிறான் காதலன்.

காதலன் தன் வீட்டிற்கு அழைக்கிறார் என்று அந்தப் பெண்ணும் ஆசையாக சென்று இருக்கிறார். அங்கே சென்றதும் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருக்கிறார். காதலன் மட்டுமல்லாது காதலனின் நண்பர்கள் ஆறுபேரும் என்று இருந்திருக்கிறார்கள். தெரியாத்தனமாக வந்து மாட்டிக் கொண்டோமே என்று நினைத்து அந்த சிறுமி அங்கிருந்து தப்பிக்க நினைப்பதற்குள், அவர்கள் கதவை பூட்டிக்கொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.

7 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார்கள். இரண்டு நாட்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் வீடியோவை காட்டி, இதைப் பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் இந்த வீடியோவை எல்லோருக்கும் போட்டுக்காட்டி விடுவோம் என்று மிரட்டி அனுப்பி இருக்கிறார்கள்.

இதனால் பயந்துபோன அந்த சிறுமி வீட்டினர் யாரிடமும் சொல்லவில்லை . இரண்டு நாட்களாக எங்கே சென்றாய் என்று பெற்றோர் கேட்டதற்கு பல காரணங்களை சொல்லி தப்பித்து இருக்கிறார். ஆனால் அந்த 7 பேரும் சிறுமியின் உறவினர்களிடம் அந்த வீடியோவை காட்டி ஒரு லட்சம் பணம் கொடுக்கவேண்டும் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்கள். அப்போதுதான் தங்கள் மகளுக்கு ஏற்பட்ட கொடூரம் தெரியவந்திருக்கிறது . உடனே அவர்கள் போலீசில் புகார் அளிக்க, போலீசார் துரித நடவடிக்கை எடுத்து அந்த ஏழு பேரையும் கைது செய்துள்ளனர். அந்த ஏழு பேரில் 4 பேர் சிறுவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us