பாராளுமன்ற பணத்தை கையாடல் செய்த விவகாரம் தொடர்பாக, அர்ச்சுணா MPயிடம் விளக்கம் கோரப்பட்டுள்ள நிலையில். இது தொடர்பாக தான் எந்த ஒரு விளக்கத்தையும் தரப்போவது இல்லை. எதனையும் தான் நிரூபித்து ஞாயப்படுத்த வேண்டிய இல்லை என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இன் நிலையில் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தவேண்டும் என்று, பாராளுமன்ற திறைசேரி நிர்வாகி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ள நிலையில், அவரை பொலிசார் மீண்டும் கைது செய்து விசாரணை நடத்தக் கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது.
ஏற்கனவே அர்ச்சுணா MP பயணித்த கார் வேகமாகச் சென்றது என்று பொலிசார் மறிக்க, அவர்களோடு தர்கத்தில் ஈடுபட்டு, அது தொடர்பாகவும் பொலிஸ் விசாரணையில் சிக்கியுள்ளார் அர்ச்சுணா. தற்போது இந்த விசாரணை வேறு இடம்பெற உள்ளது. இந்த நிலையில் இவர் எப்படி தமிழர்களின் பிரச்சனை பற்றிப் பேசப் போகிறார். இவர் சொந்தப் பிரச்சனை பற்றி பேசவே இவருக்கு நேரம் போதாது போல இருக்கே ?