யாழில் இருந்து திருச்சிக்கு நேரடி விமான சேவை : இந்தியா அரசின் குறிக்கோள் பாதி வெற்றியடைந்துள்ளதா?

இந்த செய்தியை பகிருங்கள்

யாழ்ப்பாணம் திருச்சிக்கு இடையிலான விமான சேவை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதோடு விரைவில் பாண்டிச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறைக்கு சரக்கு கப்பல் சேவையையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தியாவிலிருந்து கடல் மற்றும் ஆகாய போக்குவரத்து சேவையை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்திருந்த நிலையில், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றிற்கு இன்று விஜயம் செய்த அமைச்சர்களான நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அதிகாரிகள் சகிதம் நிலைமைகளை நேரில் ஆராய்ந்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான கடுகதி புகையிரதத்தில் வருகைதந்திருந்த கப்பல் மற்றும விமானப் போக்குவரத்துக்கான துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றிருந்தார்.

இதையடுத்து குறித்த இரு அமைச்சர்களும் குறித்த பகுதிகளுக்கான கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

முன்பதாக இந்தியாவின் பாண்டிச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுப் போக்குவரத்து மற்றும் பலாலி – திருச்சி இடையிலான விமானப் போக்குவரத்து போன்றவற்றை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தொடர் முயற்சிகளில் ஈடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயத்தினை பிரஸ்தாபித்திருந்தார்.

குறித்த சேவைகளை செயற்படுத்துவதன் மூலம், மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், மருந்துப் பொருட்கள், பால்மா, உர வகைகள் உட்பட்ட அத்தியாவசிப் பொருட்களை இந்தியாவில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு எடுத்து வந்து நியாயமான விலையில் தேவையானளவு மக்களுக்கு கிடைப்பதற்கான சூழல் உருவாக்க முடியும் என்ற கருத்தினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்த வந்திருந்தார்.

இதையடுத்து குறித்த செயற்பாட்டை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயுமாறு கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் வழங்கிய அலோசனைக்கு அமைய துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து காங்கேசன்துறை மற்றும் பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டார்.

இதன்போது எதிர்வரும் ஜூலை மாதம் திருச்சிக்கு யாழ்ப்பாண விமான நிலையத்துக்கும் இடையிலான விமான சேவையை ஆரம்பிப்பது என்றும் விரைவில் காங்கேசன்துறை பாண்டிச்சேரி க்கும் இடையிலான சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us