அடிக்கடி வீட்டிற்கு வந்த நண்பனுக்கும் மனைவிக்கும்… ஓட ஓட விரட்டி கத்திக்குத்து

இந்த செய்தியை பகிருங்கள்

மனைவியுடன் பழகுவதை எவ்வளவு கண்டித்தும் நிறுத்தாத நண்பனை ஓட ஓட விரட்டி விரட்டி கத்தியால் குத்தி சாய்த்திருக்கிறார் இளைஞர். கொடைக்கானல் பெர்ன்ஹில்சாலை பகுதியில் இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்து இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அன்னைதெரசா நகர். இப்பகுதியில் வசித்து வந்தவர் கார்த்திக். காதல் திருமணம் செய்து கொண்ட கார்த்திக் மனைவி குழந்தைகளுடன் அன்னை தெரசா நகரில் வசித்து வந்திருக்கிறார். அதே பகுதியில் இயங்கிவந்த தனியார் தங்கும் விடுதியில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சத்தியநாதன் என்ற இளைஞர் மேலாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார் .

சத்தியநாதன் – கார்த்திக் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். சத்தியநாதன் வீட்டிற்கு வந்து செல்லும் அளவிற்கு இருவரும் நட்பு வளர்ந்திருக்கிறது. சத்தியநாதனுக்கும் கார்த்திக் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசுவது, குறுஞ்செய்திகள் அனுப்புவது, சாட்டிங் செய்வதுமாக இருந்திருக்கிறார்கள் .

இதை தெரிந்துகொண்ட கார்த்திக் இருவரையுமே கண்டித்திருக்கிறார். பலமுறை கண்டித்துப் பார்த்தும் இருவருமே அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், நண்பன் சத்தியநாதனை தீர்த்து கட்டி விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் . அதன்படி பெர்ன்ஹில் சாலையில் கத்தியை மறைத்துவிட்டு வந்து, சத்தியநாதனுடன் மது அருந்தி இருக்கிறார்.

பின்னர் அவரை பைக்கில் ஏற்றி அ அழைத்துச் சென்றிருக்கிறார். கத்தியை மறைத்து வைத்திருந்த இடத்தில் சென்றதும் பைக்கை நிறுத்திவிட்டு கத்தியை எடுத்து வந்து சத்தியநாதன் சரமாரியாக குத்தி இருக்கிறார். கழுத்து வயிறு பகுதிகளில் சரமாரியாக குத்தியதில் சத்தியநாதன் தப்பித்து ஓடியிருக்கிறார். அவரை ஓட ஓட விரட்டி குத்தி இருக்கிறார் கார்த்திக் . இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் கொடுக்க போலீசார் உடனடியாக வந்து கார்த்திக்கை கைது செய்தனர். சத்யநாநாதனை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கார்த்திகிடம் நடத்திய விசாரணையில் நண்பன் துரோகம் செய்தவர் இப்படி செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us