ஓட்டல் அறையை சுத்தம் செய்ய வந்த பெண்ணை.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பு

இந்த செய்தியை பகிருங்கள்

பெற்றோருடன் அந்த ஓட்டலில் தங்கியிருந்த சிறுவன் அங்கு தூய்மை பணியாளராக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறான். அந்த பெண் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் உள்ளது அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல். இங்கே மேற்கு வங்கத்தை சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் தூய்மை பணியாளராக இருந்து வருகிறார்.

இந்த ஓட்டலுக்கு சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் வந்து தங்கியுள்ளனர். இரண்டு நாட்களாக தங்கி இருந்த குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறையை காலி செய்துவிட்டு புறப்படுவதாக இருந்தது. அதற்கு முன்னதாக அந்த தூய்மைப் பணியாளர் கழிவறையில் நின்று சுத்தம் செய்து கொண்டு இருந்திருக்கிறார். அப்போது பெற்றோருடன் தங்கி இருந்த அந்த 15 வயது சிறுவன் அங்கேயே போய் இருக்கிறார்.

நீ எதற்கு இங்கே வந்தாய்? இங்கெல்லாம் வரக்கூடாது என்று அந்தப்பெண் துரத்தியிருக்கிறார். ஆனால் அந்த சிறுவன் கழிவறையின் கதவை மூடிவிட்டு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். அதன் பின்னர் ஒன்றும் தெரியாததுபோல் பெற்றோருடன் அறையில் சென்று தங்கி இருக்கிறார்.

தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். போலீசார் விசாரணையில் அந்த குடும்பத்தினர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது . இரண்டு நாட்கள் ஓட்டலில் தங்கியிருந்த அவர்கள் அன்றைக்குத்தான் அறையைக் காலி செய்வதாக இருந்திருக்கிறது. அதற்க்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதால் சிறுவனை கைது செய்து ஹரித்துவாரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us