போதையில் சமைக்க முடியாத மனைவியை கொன்று சடலத்துடன் தூங்கிய கணவர்

இந்த செய்தியை பகிருங்கள்

 

போதையில் சமைக்க முடியாது நீயே சமைத்து சாப்பிடு என்று சொன்ன மனைவியை தலையணையை வைத்து முகத்தில் அழுத்தியதில் மூச்சுத்திணறி அவர் உயிரிழந்து விட, அது தெரியாமலேயே அவரின் சடலத்துடன் அருகிலேயே விடிய விடிய தூங்கியிருக்கிறார் கணவர். விடிந்தபின் மனைவி இறந்ததை அறிந்து தப்பித்து ஓடியவர் செல்போன் சிக்னல் மூலம் பிடிபட்டுள்ளார்.

டெல்லியில் சுல்தான்பூர். இப்பகுதியில் வசித்து வந்த வினோத்குமார். இவரின் மனைவி சோனாலி. கடந்த 2008ஆம் ஆண்டில் இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்குப் பின்னர் இருவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். கணவன்- மனைவி போல் மட்டும் இல்லாமல் நண்பர்களாக இவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டு சிரித்துப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இருவருமே போதையில் இருந்தபோது சோனாலி இடம் சாப்பாடு போடச் சொல்லிக் கேட்டிருக்கிறார் வினோத்குமார். அதற்கு சோனாலி இன்னும் சாப்பாடு சமைக்கவில்லை. நீயே சமைத்து சாப்பிடு என்று சொல்லிவிட்டு போதையிலேயே அவர் தூங்கியிருக்கிறார். ஆனாலும் மனைவியிடம் சாப்பாடு வேண்டும் கேட்க, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது ஆத்திரத்தில் தலையணையை எடுத்து மனைவியின் முகத்தில் வைத்து அழுத்தி இருக்கிறார். இதில் ஏற்பட்ட தகராறில் மனைவி சோனாலி உயிரிழந்திருக்கிறார். ஆனால் போதையில் இருந்த கணவருக்கு அது தெரியாமல் போகவே போதையிலேயே மனைவியின் சடலத்துடன் தூங்கியிருக்கிறார். மறுநாள் காலையில் எழுந்த போது தான் மனைவி இறந்து கிடப்பது கண்டு இரவில் நடந்த சம்பவம் புரிந்திருக்கிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த வினோத்குமார் வீட்டில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டிற்குள் சோனாலியின் இறந்து கிடந்ததை பார்த்து விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் வினோத்குமாரின் செல்போன் எண்ணை வைத்து செல்போன் சிக்னல் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டறிந்து அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த பணத்தையும் இரண்டும் இரண்டு பாட்டில்கள், ரத்தக்கறை படிந்த தலையணையை போலீசார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள வினோத்குமார் இடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மனைவியை தலையணையை வைத்து அழுத்திக் கொன்றதை ஒப்புக்கொண்டதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us