ஈரோடு தேர்தலில் டெபாசிட் இழந்த சீமானின் கட்சி: அரசியல் அநாதையான கதை !

கடந்த 5ம் திகதி ஈரோட்டில் நடைபெற்ற இடைத் தேர்தலில், அதிமுக மற்றும் இதர கட்சிகள் தாம் போட்டியிடவில்லை என்று அறிவித்தார்கள். இதனை அடுத்து ஈரோட்டில் வெறும் தி.மு.க மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சியும், சில சுயேட்சைகளுமே , போட்டியிட்டார்கள்.. இன் நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட, சீதாலட்சுமி டெபாசிட் கூட பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளார்.

டெபாசிட் பெறுவதற்கு 25,777 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், நாதக வேட்பாளருக்கு 23,810 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் இந்த இடைத்தேர்தலில் நாதக படுதோல்வியை சந்தித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. காரணம் அதிமுக அங்கே போட்டியிடவில்லை. அதனால் அதிமுக ஆதரவாளர்கள் திமுகவுக்கு போடாமல், தமது எதிர்ப்பை காட்ட நாம் தமிழர் கட்சிக்கே போட்டார்கள். அதனால் தான் இந்த 23,000 ஆயிரம் வாக்கு விழுந்துள்ளது. இல்லையென்றால் வெறும் 15,000 வாக்கு கூட வர வாய்ப்பில்லை என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியும் டெபாசிட் இழந்துள்ளார்.