யாழில் இப்படி ஒரு வர்த்தகரா! மெச்சும் சமூக ஆர்வலர்கள்

இந்த செய்தியை பகிருங்கள்

யாழ்.சாவகச்சேரியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் மனமுவந்து செய்த நற்செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் நாட்டு மக்கள் அத்தியாவசிய உளவு பொருட்களை பெற்றுக்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஒருவேளை உணவுக்காக அல்லல்படும் வறிய மக்களே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் யாழ் வர்த்தகர் ஒருவர் ஒரு டிரம் அருகே எழுதிவைத்துள்ள வாசகம் பல்லனது கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அதாவது இன்றைய உணவுக்கு அரிசி இல்லாமல் வருந்தும் உறவுகள் இதிலிருந்து எடுத்துக்கொள்ளாம் என அந்த டிரம் அருகே எழுது வைக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us