கீர் ஸ்டார்மர், ஹெல்த் மினிஸ்டர் ஆண்ட்ரூ க்வினை நேற்று இரவு பணிநீக்கம் செய்தார். ஆண்ட்ரூ க்வின் ஆன்லைனில் இனவெறி மற்றும் பாலியல் வெறுப்பு கருத்துகளை பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஒரு செய்தியில், ஒரு மூத்த பெண் குப்பை கூடைகள் பற்றி கேட்ட்டு பின்னர் இறந்து விட்டார் என்று நக்கலாக பதில் வழங்கி இருந்தார்., அவர் இறந்துவிட வேண்டும் என்று கிண்டலாக கூறியதாக கூறப்படுகிறது.
மற்றும் மூத்த MP யான அஞ்சலாவை, ஒரு செக்ஸ் தொழிலாளி என்றும் இவர் வர்ணித்துப் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். தற்போது பிரித்தானிய சுகாதார அமைச்சராகவும், பேச்சாளராகவும் உள்ள ஆண்ட்ரூ க்வினை உடனடியாக பதவியில் இருந்து நீக்கிய பிரதமர் கியர் ஸ்டாமர், லேபர் கட்சியில் இருந்தும் அவரை வெளியேற்றியுள்ளார்.
இந்த தடாலடி நடவடிக்கை பிரிட்டனில் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.