காலில் முள் குத்திய இளைஞன் திடீர் மரணம் : நடந்தது என்ன?

இந்த செய்தியை பகிருங்கள்

காலில் முள் குத்தியதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

அராலி மேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் ஒன்று குத்தியதாகவும், அவ்விடத்தில் வலி ஏற்பட்டு உள்ளதாக கூறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நிலையில் விடுதியில் அனுமதிக்கப்பட்டு இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்நிலையில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us