பெண் மதபோதகர் வனப்பகுதியில் எலும்பு கூடாக மீட்பு

இந்த செய்தியை பகிருங்கள்

கடந்த 25 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் மதபோதகர் வனப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். பெண் மதபோதகர் மரணத்தில் கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் தாம்பரம் அடுத்த சேலையூர் மதுரபாக்கம். இக்கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர் அழுகிய நிலையில் எலும்புக்கூடு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனே சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு சென்று எலும்புக்கூடுவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .

அதன் பின்னர் காணாமல் போனவர்கள் பற்றிய விவரத்தை போலீசார் விசாரித்து வந்ததில், அகரம் தென் எம்ஜிஆர் நகர் மகாலட்சுமி தெருவை சேர்ந்த ஏஞ்சலின் என்கிற மத போதகர் தனது தாய் எஸ்தர் (55) கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் காணவில்லை என்று கடந்த 8ஆம் தேதி இது குறித்து சேலையூர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

பெருங்களத்தூரில் உள்ள சபைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். கடந்த இருபத்தி ஆறாம் தேதியன்று சபைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என்று புகார் அளித்திருக்கிறார்.

இந்நிலையில், காணாமல்போன 25 நாட்களுக்குப் பின்னர் வனப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்டெடுக்கப்பட்டிருக்கிறார் எஸ்தர். தாம்பரம் அடுத்த சேலையூர் மதுரபாக்கத்தில் உள்ள வவனப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்டெடுக்கப்பட்டது, எஸ்தர்தான் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் எஸ்தர் உயிரிழந்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எஸ்தர் உடலை அனுப்பி வைத்தனர். 26 ஆம் தேதி காணாமல் போன எஸ்தர் அந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் எப்படி இறந்து கிடந்தார்? கடத்திச் சென்று கொலை செய்து உடலை வீசிவிட்டார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us