பள்ளி முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்த மாணவி – இளைஞர் போக்சோவில் சிறையிலடைப்பு

இந்த செய்தியை பகிருங்கள்

சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் பால அருணாச்சலம். இப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு சென்ற அந்த சிறுமி மாலையில் வீட்டுக்கு தாமதமாக வந்திருக்கிறார். ஏன் இவ்வளவு தாமதமாக வந்து இருக்கிறார் என்று சிறுமியிடம் தாய் விசாரித்தபோது, காதல் விவகாரம் தெரியவந்திருக்கிறது.

சிறுமிக்கும் ராயபுரம் எம்ஜிஆர் நகர் ஹவுசிங் போர்டைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜீவுடன் கடந்த நான்கு மாதங்களாக பழக்கம் இருந்தது தெரிய வந்திருக்கிறது . தன்னை காதலிப்பதாக சொல்லி வந்த ஸ்டீபன் ஆசை வார்த்தை சொல்லி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததையும் அதனால்தான் வீட்டுக்கு வர தாமதமாகிவிட்டது என்று சொல்லியிருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரை அடுத்து ஸ்டீபன்ராஜை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us