அனுரா அரசு மீது மக்கள் விரக்த்தி- திரை மறைவில் நடக்கும் பெரும் கூட்டுச் சதிகள் !

கடந்த தேர்தலில் பெரும் வெற்றியடைந்து, புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள அனுராவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி, அரசைக் கவிழ்க்கும் பெரும் சதியில் எதிர்கட்சிகள் இறங்கியுள்ளது. மகிந்த அணி, சஜித் அணி , ரணில் என்று பலர் இதில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இலங்கையில் நேற்றைய தினம்(09) ஏற்பட்ட திடீர் மின் வெட்டு மற்றும் இன்று ஏற்பட்டுள்ள மின் வெட்டால் மக்கள் விரக்த்தி அடைந்து வருகிறார்கள்.

மின் மாற்றி மீது குரங்கு பாய்ந்ததால், அது செயல் இழந்ததாக கூறப்பட்டாலும். அதனை சீர் செய்ய 7 மணி நேரமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில். இன்று(10) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் கோளாறு என்று, மேலும் சில இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, நாட்டில் அரிசியை பதுக்க ஆரம்பித்துள்ளார்கள், எதிர் கட்சிக்கு ஆதரவான வியாபாரிகள். இதனால் இலங்கையில் பதுக்கியிருக்கும் அரிசியை கண்டு பிடிக்க பொலிசார் அலைந்து திரிகிறார்கள்.

இதில் ரணில் பக்கச்சார்புடைய பொலிஸ் அதிகாரிகள், சஜித்திற்கு ஆதரவான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மகிந்தவுக்கு ஆதரவான பொலிஸ் அதிகாரிகள் என்று அனைவருமே அனுராவின் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதால், அனுராவின் அரசு திணறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பல அதிகாரிகளை அடிக்கடி அனுரா , இடம் மாற்றியும் வருகிறார். இந்த நிலை நீடித்தால், மக்கள் மத்தியில் எதிர்கட்சிகள் நினைப்பது போல ஒரு விரக்த்தி ஏற்பட வாய்ப்பு உள்ளது.