ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? – கதறடிக்கும் காஜல் அகர்வால்..!

இந்த செய்தியை பகிருங்கள்

மிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்ட நிலையில் தற்பொழுது இவர் சினிமாவிற்கு முழுக்கு போட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி ஆனார்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு அந்த படம் அவருக்கு பெரிதாக வரவேற்பு கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் சென்ற நடிகை காஜல் அகர்வால் நடிகர் ராம்சரணுடன் மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இத்திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதனால் கவனிக்கப்படும் ஹீரோயினாக நடிகை காஜல் அகர்வால் உருவெடுத்தார்.

அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்தார் இந்த படமும் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது அதன் பிறகு இவருக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.

ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிய தொடங்கிய பிறகு தன்னுடைய தொழில் நண்பருமான கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்பொழுது ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாக காஜல் அகர்வாலுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் காஜல் அகர்வால் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us