எரிபொருள் தேடிச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கொடுமை-!

இந்த செய்தியை பகிருங்கள்

கொடகம நகரில் எரிபொருள் வரிசையில் நின்ற இளைஞர் ஒருவர் வேறு ஒரு எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மற்றுமொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கொடகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த இளைஞர் ஒருவர் பாதுக்க துன்னான பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி உள்ளார்.

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென வீதியில் வீழ்ந்து எரிவாயு ஏற்றிச் சென்ற லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர் மீகொட, தம்பே குகுலவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய லஹிர ஹஷான் ரணசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சகோதரனும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பாதுக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us