காரில் லிப்ட் கேட்ட மாணவிகளுக்கு நேர்ந்த கதி – அறையில் அடைத்து வைத்திருந்த இளைஞர்கள் சிறையிலடைப்பு

இந்த செய்தியை பகிருங்கள்

காரில் லிப்ட் கேட்ட மாணவிகளை அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் புதன் சந்தைப்பேட்டை. இப்பகுதியை சேர்ந்த சகோதரிகள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். தந்தை இல்லாத நிலையில் தாயாரின் வளர்ப்பு வாழ்ந்து வரும் சகோதரிகள் தேர்வு விடுமுறையில் குடும்ப நிலைமையை சமாளிக்க, ஈரோட்டில் இருக்கும் ஜவுளிக் கடைக்கு வேலைக்காக சென்று வந்திருக்கிறார்கள்.

கடந்த 18ஆம் தேதி வேலை முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது இந்த மாணவிகள் வசித்துவரும் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற 21 வயது இளைஞரும் அவரது நண்பர் வினோத்தும் காரில் வந்திருக்கிறார்கள் . அவர்கள் வீட்டில் கொண்டு விடுவதாகக் சொல்லவும், தெரிந்த முகம் என்பதால் மாணவிகளும் காரில் ஏறிச் சென்று வீட்டில் இறங்கிக் கொள்ளலாம் என்று காரில் ஏறி இருக்கிறார்கள்.

வீட்டில் கொண்டுபோய் விடுவதாகச் சொன்ன அந்த இளைஞர்கள் பள்ளிப்பாளையத்திற்கு போகாமல் நாமக்கல் தங்கும் விடுதிக்கு போயிருக்கிறார்கள். அங்கே அறையில் அந்த சகோதரிகள் இருவரையும் அடைத்து வைத்த இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்கள்.

இதற்கிடையில் காலையில் வேலைக்குச் சென்ற வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு கடைசியாக போலீசில் புகார் அளித்து உள்ளார். அப்போது செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு இளைஞர், உங்கள் மகள்கள் வீட்டிற்கு வந்து விட்டார்களா என்று விசாரித்து இருக்கிறார். பதறி அடித்து நீங்கள் யார் என்று விசாரிப்பதற்குள் செல் போனை துண்டித்து விட்டார் . அந்த என்ன செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பதும், அவர் மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தம்து தெரிய வந்திருக்கிறது.

சந்தோஷம் அவரது நண்பர் வினோத்தும் சேர்ந்துதான் கம்பெனி காரில் மாணவிகளை கடத்தி சென்றது தெரிய வந்திருக்கிறது. செல்போன் சிக்னலை வைத்து நாமக்கல் தங்கும் விடுதிக்கு சென்ற போலீசார் , அங்கிருந்த மாணவிகளையும் மீட்டுள்ளனர். இளைஞர்கள் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருந்தனர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நாமக்கல் சிறையில் இருவரையும் அடைத்துள்ளனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us