மனைவி தீக்குளித்து தற்கொலை – கணவருக்கு ஆயுள்

இந்த செய்தியை பகிருங்கள்

வரதட்சணை கொடுமையால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு மணிவண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் கணவர் மணிகண்டனும் அவரது குடும்பத்தினரும் அதிக வரதட்சணை கேட்டு சசிகலாவை சித்திரவதை செய்து வந்துள்ளனர் . இதில் மனமுடைந்த சசிகலா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் .

சம்பவம் குறித்து அறிந்த உசிலம்பட்டி போலீசார் விரைந்து சென்று சசிகலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, கணவர் மணிகண்டன் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 மீது உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து இருந்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட திருவிழா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து என்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. 5 பேர் மீதும் குற்றம் உறுதியானது .

வரதட்சனை கொடுமையால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதால் கணவர் மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி கிருபாகரன். மேலும், சசிகலாவின் மாமியார் உள்பட 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து இருக்கிறார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us