தூத்துக்குடி அருகே மின்வாரிய ஊழியர் வெட்டிக்கொலை – மர்மநபர்கள் வெறிச்செயல்!

இந்த செய்தியை பகிருங்கள்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் துணை மின்நிலைய ஊழியர் மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் பூவையா மகன் ஆனந்தபாண்டி (51). இவர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தில் லைன் மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.இந்த நிலையில், ஆனந்தபாண்டி நேற்று இரவு துணை மின்நிலையத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நள்ளிரவில் அலுவலகத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இன்று காலை மின்நிலையத்திற்கு வந்த ஊழியர்கள் ஆனந்தபாண்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் நாசரேத் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள், நாசரேத் காவல் ஆய்வாளர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தபாண்டி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமாக என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மின்வாரிய ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us