அடத்தூ.. பறிதவித்த நோயாளிகள்.. நீச்சல் குளத்தில் நர்சுகளுடன் அரைநிர்வாணமாக அரசு மருத்துவர் செய்த அசிங்கம்.

இந்த செய்தியை பகிருங்கள்

டாக்டருக்கு படித்த மகனை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறிவிட்டு நர்சுகளுடன் அரசு மருத்துவர் நீச்சல்குளத்தில் உல்லாச குளியல் போட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக புகைப்படங்கள் வைரலாக நிலையில் அந்த மருத்துவர் மீது அரசு ரீதியான நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இறைவனுக்கு நிகராக போற்றப்படுபவர்கள் மருத்துவர்கள், கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது அது உண்மை என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் மருத்துவர்கள். ஆனால் ஒரு சில மருத்துவர்கள் செய்யும் தரம் தாழ்ந்த செயல்கள், ஒட்டுமொத்த மருத்துவ இனத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகிறது. இதுபோன்ற சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. நோயாளிகளை மகனுடன் விட்டுவிட்டு செவிலியர்கள் உடன் நீச்சல் குளத்தில் தலைமை மருத்துவர் உல்லாச குளியல் போட்டுள்ள சம்பவம்தான் அது.

முழு விவரம் பின்வருமாறு:-  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக  இருப்பவர் தினகர்,  தலைமை மருத்துவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி வயதுக்கு மீறிய சேட்டைகளில் ஈடுபடும் பேர்வழியானவே இருந்து வந்துள்ளார் இவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி இருந்தும் இவர் விடுப்பு எடுத்துள்ளார், ஆனால் விடுப்பில் இருப்பதை மறைக்க மருத்துவம் படித்த தனது மகனை அழைத்து வந்து நோயாளிகளை கவனித்து கொள்ளும்படி கூறிவிட்டு மருத்துவமனையில் இருந்த சக செவிலியர்கள் உடன் குழுவாக தனது காரில் ஊர்சுற்ற கிளம்பினார் தினகரன்.

அருகிலுள்ள நீச்சல் குளத்துக்கு சென்று அங்கு செவிலியர்கள் புடைசூழ அறைநிர்வாணத்துடன் உல்லாச குளியல் போட்டுள்ளார். அதற்கான புகைப்படம் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளை கவனிக்காமல் தலைமை மருத்துவர் ஊர் சுற்றியதற்கான புகைப்படங்கள் ஆதாரத்துடன் வெளியானது. ஒரு தலைமை மருத்துவர் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளலாமா, இவரே இப்படி நடந்து கொண்டால் இவருக்கு கீழ் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என மருத்துவமனை ஊழியர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து தலையில் அடித்துக் கொண்டனர்.

பின்னர் இது அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது, துறை ரீதியான நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது. இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரித்ததில் ஞாயிற்றுக்கிழமை எனக்கு விடுமுறை அதனால் என்னுடன் பணிபுரியும் செவிலியர்களுடன் சுற்றுலா சென்றேன் என ஆணவமாக பதில் கூறியுள்ளார். விடுப்பில் சென்ற நீங்கள் ஏன் உங்கள் மகனை சிகிச்சை அளிக்க வைத்தீர்கள்  என அதிகாரிகள் திருப்பி கேட்க பதில் சொல்ல முடியாமல் தினகரன் விழித்துள்ளார். அவரின் பதில்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லாததால் விரிவான அறிக்கை தயார் செய்து அதை மாநில மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறை இயக்குனர் கோமதி ஈடுபட்டுள்ளார்.தலைமை மருத்துவர் தினகர் மகன் அஸ்வின்  செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த ஆண்டுதான் மருத்துவ படிப்பை முடித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமை மருத்துவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி செவிலியர்கள் உடன் நீச்சல் குளத்தில் அறைநிர்வாணத்துடன் உல்லாசம் அனுபவித்துள்ள சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us