இங்கலாமா டாட்டூ போடுறது? வியந்துப்போன மருத்துவர்-! நடந்தது என்ன தெரியுமா?

இந்த செய்தியை பகிருங்கள்

உடலில் டாட்டூ போட்டுக்கொள்ளும் பழக்கம் பலரிடமும் தற்போது வழக்கத்தில் உள்ளது. அதிலும் தொப்புளில், காதில், காலில், உடல் முழுவதும் என விநோதமான டிசைன்களில் டாட்டூ போட்டுக்கொள்கிறார்கள்.

அந்த வகையில் தனது பிறப்புறுப்பில் டாட்டூ போட்டுக்கொண்டவரால் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்.

அமெரிக்காவின் Missouri-ல் உள்ள செயின்ட் லூயிஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் Benjamin Schmidt.

இந்நிலையில், இரவு நேர பணியில் இருந்த மருத்துவர் பெஞ்சமினை அணுகிய இளைஞன் ஒருவர், சிறுநீர் கழிக்கும்போது தனக்கு பிறப்புறுப்பிலும், முதுகிலும் வலிப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதுப்போன்ற வலி ஆண்களுக்கு வருவது இயல்பானதாக இருக்காததால் அவரை பரிசோதிக்க எத்தனித்திருக்கிறார் டாக்டர் பெஞ்சமின். அதனால் அவரது பிறப்புறுப்பை பரிசோதனை செய்ய மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.

அந்த இளைஞனின் பிறப்புறுப்பில் கரும்புள்ளி இருப்பதை கண்ட மருத்துவர் பெஞ்சமின், இதற்கு முன் இப்படி கரும்புள்ளி இருந்ததை கண்டதுண்டா எனக் கேட்டிருக்கிறார்.

உடனே என்னவாக இருக்கும் என அந்த இளைஞனும் பார்க்க, பார்த்ததும் சிரித்ததோடு அந்த கரும்புள்ளி என்னவென்று டாக்டருக்கும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

அதாவது, வியட்நாமில் தன்னுடைய பிறப்புறுப்பில் Scorpion டிசைனில் டாட்டூ போட்டுக்கொண்டதாக கூறியதோடு, இதற்காக அதிர்ச்சியடைய வேண்டாம் எனவும் சொல்லியிருக்கிறார் அந்த இளைஞர். இதைக் கேட்டதும் சற்று முகம் சுழித்திருக்கிறார் டாக்டர் பெஞ்சமின்.

நைட் ஷிப்ஃடில் இருந்தபோது நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் பெஞ்சமின் தனது டிக்டாக் பக்கத்தில் வீடியோவாக பேசி வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ வைரலானதும், பிற டாக்டர்களும் தாங்கள் இரவு பணியில் இருந்த போது நடந்த விநோதமான நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கிறார்கள்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us