மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் ; திருகோணமலையில் இடம்பெற்ற கொடூரம்-!

இந்த செய்தியை பகிருங்கள்

திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(22) மாலை இடம்பெற்றுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த வீ.திவ்யா (30 வயது) என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மதுபோதையில் வந்த கணவன் மனைவியான குறித்த பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார். இதனையடுத்து, காயமடைந்த மனைவி அயலவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணின் கணவனை அயலவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us