கடந்த 2 வாரங்களாக விஞ்ஞானிகள் மீண்டும் மீண்டும் கணக்குப் போட்டு பார்ததில், இந்த விண் கல் பூமியை தாக்கும் வாய்ப்பு ரெட்டிப்பாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு விளையாட்டு மைதானம் அளவு பெரிய இந்த விண் கல், பூமியை தாக்கினால், ஒரு நகரமே அழிந்து விடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த கால்பந்து மைதான அளவுள்ள பாறையை திசைதிருப்ப ஒரு விண்கலத்தை கட்டமைக்க எந்த திட்டமும் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது. 2024 டிசம்பர் 25-ஆம் தேதி, 90 மீட்டர் அகலமுள்ள ஒரு விண்பாறை பூமியை கடந்து சென்றது. இது சிலி நாட்டில் உள்ள ஒரு தொலைநோக்கியால் இரண்டு நாட்களுக்குப் பிறகு கண்டறியப்பட்டது.
ஆனால் அதன் வட்டப் பாதை, சிறிது சிறிதாக பூமியை நோக்கி ஈர்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. எனவே இந்த விண் கல் 2032 டிசம்பர் 22-ஆம் தேதி பூமியைத் தாக்கும் வாய்ப்பு, 2.3 சதவீதம் இருக்கும் என்று கூறப்படுகிறது. . இது கடந்த வாரம் கணக்கிடப்பட்ட 1.2 சதவீத ஆபத்து மதிப்பை விட இரட்டிப்பாகும். தற்போது மேலும் கணக்கிட்டுப் பார்கிறார்கள்.
50 மீட்டருக்கும் அதிகமான அகலம் கொண்ட ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்பு ஒரு சதவீதத்தை விட அதிகமாக இருந்தால், உலகளாவிய நிபுணர்கள் அந்த ஆபத்தைப் பற்றி விவாதிக்கும் வழக்கமான நடைமுறை உள்ளது. இந்த டிசம்பர் சிறுகோள், அதிகாரப்பூர்வமாக 2024 YR4 என அழைக்கப்படுகிறது. இது தற்போது நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) ஆகியவற்றின் சிறுகோள் ஆபத்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நாசாவின் மதிப்பீட்டின்படி, இந்த சிறுகோளின் எடை கிட்டத்தட்ட கால் மில்லியன் டன்கள் ஆகும். இது பூமியைத் தாக்கினால், 2.2 மில்லியன் டன்கள் TNT வெடிபொருளின் விசையுடன் வெடிக்கும். இது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் விசையை விட 150 மடங்கு அதிகமாகும்.