ஆடைகளை கழற்றுமாறு அந்த பெண் சொல்ல.. அதிகாரியும் அப்படியே செய்ய… ரெக்கார்டு ஆனதால் நேர்ந்த கதி

இந்த செய்தியை பகிருங்கள்

ஆடைகளை கழற்றுமாறு அந்தப் பெண் சொல்ல அதிகாரியும் அப்படியே செய்ய அது ரெக்கார்டு ஆகியிருக்கிறது. அந்த வீடியோவை வைத்து அதிகாரியை மிரட்டி இருக்கிறது அந்த ஆபாச வீடியோ கும்பல். 2 லட்சம் பணத்தை இறந்தபின்னர் போலீசிடம் சென்று புகார் அளித்ததால் அந்த கும்பலை தேடி வருகிறது போலீஸ்.

மும்பையில் இயங்கி வரும் அந்த நிறுவனத்தில் 57 வயது நபர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சனிக்கிழமையன்று வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவல் வந்திருக்கிறது. ஆபாச வீடியோ காலில் பேச விருப்பமா என்று மெசேஜில் இருந்திருக்கிறது. இதை பார்த்ததும் சபலம் அடைந்த அந்த அதிகாரி ஆமாம் என்று சொல்லி இருக்கிறார்.

உடனே அந்த அதிகாரிக்கு வீடியோ காலில் ஒரு பெண் வந்திருக்கிறார். ஆடையில்லாமல் ஆபாசமாக இருந்த அந்த பெண் , அதிகாரியை ஆடைகளை கழற்றுமாறு சொல்லியிருக்கிறார். அதிகாரியும் அப்படியே செய்ய இதை அந்தப் பெண் ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறார். அதன் பின்னர் அடிக்கடி அந்த அதிகாரிக்கு போன் அழைப்பு வந்திருக்கிறது. இனிமேல் எனக்கு இது தேவையில்லை என்று அதிகாரி சொன்னாலும், அப்படி என்றால் நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விடு. இல்லை என்றால் இந்த ஆபாச வீடியோக்களை எல்லாருக்கும் அனுப்பி விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.

அந்த அதிகாரியுடன் வீடியோ காலில் ஆபாசமாக நின்று பேசிய பெண்ணும் மிரட்டியிருக்கிறார். டெல்லி போலீஸ் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் மிரட்டியிருக்கிறார் . இதனால் பயந்துபோன அந்த அதிகாரி அந்த கும்பலுக்கு இரண்டு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார். அதன் பின்னரும் அந்த கும்பல் அடங்கவில்லை. அந்த அதிகாரியிடம் மேலும் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த அதிகாரி போலீசுக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. மானம் போனாலும் பரவாயில்லை என்று முடிவுக்கு வந்து போலீசில் சென்று புகார் அளித்திருக்கிறார்.

போலீசார் அந்த வீடியோ காலிங் வந்த எண்களை வைத்து அந்த கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us