நடிகர் சதீஷ் வஜ்ரா சரமாரியாக குத்திக்கொலை

இந்த செய்தியை பகிருங்கள்

பிரபல நடிகர் சதீஷ் வஜ்ரா ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். சதீஷின் மனைவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனால் ஆத்திரத்தில் இருந்த அவரின் சகோதரர் சதீஷை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் மண்டியா மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் வஜ்ரா(36). இவர் லகோரி என்கிற கன்னட படத்தில் கதாநாயகன் நடித்திருக்கிறார். பல கன்னட படங்களில் துணை நடிகராக நடித்து வந்துள்ளார்.

குடும்பத்தினருடன் சதீஷ் பெங்களூரு பட்டனகெரே பகுதியில் வசித்து வந்தார் . நேற்று இரவு சதீஷின் வீட்டிற்கு மர்ம நபர்கள் புகுந்து சதீஷிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி விடுகிறார்கள் .

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் சதீஷ். அவர் குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் சதீஷ் . அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் உயிரிழந்திருக்கிறார்.

ஆர் ஆர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பாமீதா என்கிற இளம்பெண்ணை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார் சதீஷ். குடும்பத் தகராறினால் சதீஷின் மனைவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டு விட்டார். இதனால் ஆத்திரத்தில் அவரது சகோதரர் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாமீதாவின் சகோதரர்கள் சுதர்சன், நாகேந்திரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சதீஷ் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us