இது என்ன புது உருட்டு.. ‘அவர் ரொம்ப ஸ்வீட்’ சமந்தாவின் மாஜி கணவரை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!

இந்த செய்தியை பகிருங்கள்

சமந்தாவின் மாஜி கணவரான நாக சைதன்யாவை பிரபல நடிகை புகழ்ந்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் சில படங்களில் ஒன்றாக நடித்தனர். இதையடுத்து அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. 7 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்த அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். தற்போது இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக உள்ளனர். நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இதனிடையே நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் காதலில் இருப்பதாகவும் இருவரும் நாக சைதன்யாவின் புதிய பங்களாவில் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல் வெளியானது. மேலும் நடிகை ஷோபிதா துலிபாலா தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அடிக்கடி செல்லும் நாக சைதன்யா அவருடன் பல மணிநேரம் செலவிடுவதாகவும் கடந்த 2 நாட்களாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் நாக சைதன்யா ரொம்பவே ஸ்வீட் பர்சன் என புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரபல நடிகையான சாய் பல்லவி. சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் விரத பருவம் படம் வெளியானது. நக்சல்கள் பற்றிய இப்படத்தில் வெண்ணிலா என்ற நிஜ கேரக்டரில் நடித்துள்ளார் சாய் பல்லவி. வெண்ணிலாவாக வாழ்ந்திருக்கிறார் சாய் பல்லவி என அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் பங்கேற்று வருகிறார் சாய் பல்லவி. அந்த வகையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு நேர்க்காணல் அளித்துள்ளார் சாய் பல்லவி. அதில் அவர் நடித்த ஆண் நடிகர்களின் படங்கள் காட்டப்பட்டு அவர்களின் கேரக்டர் குறித்து கேட்கப்பட்டது. அப்போது ‘லவ்ஸ்டோரி’ படத்தில் நடித்த நாக சைதன்யாவின் படத்தை காட்டிய போது, நாக சைதன்யா மிகவும் இனிமையானவர், இயல்பிலேயே உதவும் குணம் கொண்டவர் என்று பாராட்டினார் சாய் பல்லவி.

மேலும் நாக சைதன்யா தனது வேலையை மனதில் வைத்து, தேவைப்பட்டால் உதவி செய்வார் என்றும் கூறினார். சாய் பல்லவி, நாக சைதன்யா குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாக சைதன்யாவும் சாய் பல்லவியும் லவ் ஸ்டோரி படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி பர்ஃபெக்ட் என கமெண்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us