எரிபொருள்-எரிவாயு வரிசையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : அநுராதபுரத்தில் இளைஞன் பலி!

இந்த செய்தியை பகிருங்கள்

 

எரிபொருள் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளார்.

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இன்று அதிகாலை கனரக வாகனமொன்று மோதியதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம், பண்டுலுகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக குறித்த இளைஞர் நேற்றிரவு முதல் வரிசையில் காத்திருந்துள்ளார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஐ கடந்துள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us